ஆபத்தான நிலையில் இலங்கையின் சுகாதார சேவை! செஞ்சிலுவை சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கையில் சுகாதார சேவை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு காரணமாக சுகாதார சேவை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை
இந்த நிலைமை காரணமாக அவசர மற்றும் பொது சுகாதார சேவைகள் இரண்டும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை காரணமாக, சில வழக்கமான அறுவை சிகிச்சைகள் கூட இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இரத்தமாற்ற சேவைகள் சீர்குலைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இந்நிலைமை பெருந்தோட்ட மக்களுக்கு மிகவும் கடுமையானதாக மாறியுள்ளதாகவும், தரமான சுகாதார சேவையை பெற்றுக்கொள்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.