வைத்தியசாலைக்கு செல்ல அச்சப்படும் இலங்கை மக்கள்!
சுகாதார அமைச்சு என்பது கொள்ளை மற்றும் ஊழலில் ஈடுபடும் மாபியா என்பது அறிந்த ஒன்றாகும். வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் மருந்துகளில் மாபியா உள்ளது என தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
திவுலப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஆசியாவின் சிறந்த சுகாதார வசதிகள் உள்ள நாடே இலங்கை என அந்த நாட்களில் பெரிதாக பேசிக்கொண்டோம். ஆனால் இன்று வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு பயமாகவுள்ளது.
பில்லியன் கணக்கில் சம்பாதிக்கும் மாபியாக்கள்

மருந்து வில்லைகளை பாவிப்பதற்கு கெனூலா ஏற்றிக்கொள்வதற்கு பயமாகவுள்ளது. ஏன் ஏன்றால் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது தான் இன்றைய நாட்டின் நிலைமையாகும். சுகாதார அமைச்சு என்பது கொள்ளை மற்றும் ஊழலில் ஈடுபடும் மாபியா என்பது அறிந்த ஒன்றாகும்.
வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் மருந்துகளில் மாபியா உள்ளது. இலங்கைக்கு மருந்துகளை கொண்டு வரும் மாபியாக்கள் மில்லியன் பில்லியன் கணக்கில் சம்பாதிக்கின்றன. அதற்காகவே இன்று இவ்வளவு சண்டை போடுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
விமானத்துக்குள் நுழைந்த ஒரு கொசு... நான்கு பேருக்கு மலேரியா தொற்று உருவானதால் பரபரப்பு News Lankasri
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri