வெளிநாட்டு கையிருப்பு தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு பெப்ரவரி மாதத்தில் 2.31 பில்லியன் டொலர்களாக பராமரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு நாணய கையிருப்பு 2,025 மில்லியன் டொலர்களாகவும் தங்கம் கையிருப்பு 98 மில்லியன் டொலர்களாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நவம்பர் 2021 இல், இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு நிலை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு 1.6 பில்லியன் டொலர்களாக குறைந்துள்ளது.
கடந்த வியாழன் (3) இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட வாராந்திர பொருளாதார குறிகாட்டியின் அறிக்கையின்படி, டிசம்பர் 2021 இறுதியில், இலங்கையின் தங்க இருப்பு 175.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
அறிக்கையின்படி, வெளிநாட்டு நாணய கையிருப்பு 2.7 பில்லியன் டொலராக இருந்தது, இதில் 10 பில்லியன் சீன பரிமாற்றமும் அடங்கும். இலங்கை மத்திய வங்கியால் தொகுக்கப்பட்ட தரவுகளின்படி, ஒரு வருடத்திற்கு முன்பு, தங்கம் கையிருப்பு 408.9 மில்லியனாக டொலராக இருந்தது.
இதனிடையே, கையிருப்பு நிலைகள் குறித்த நேரத்தில் மத்திய வங்கியால் அறிவிக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.