இலங்கையின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும் - சர்வதேச நாணய நிதியம்
இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் 8.7 வீதம் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று 2022 ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 01 வரை இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கை அதிகாரிகளுடன் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய பொருளாதார சரிசெய்தல் வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடியது.
தமது விஜயத்தின் இறுதியில் தூதுக்குழுவினர் இன்று (01) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது,

பொருளாதார நடவடிக்கைகளுக்கு மேலும் இடையூறு
“இலங்கை கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. வெளிப்புற அதிர்ச்சிகள் மற்றும் தாங்க முடியாத பொதுக் கடனைத் தாங்குவதற்கான போதிய பாதுகாப்புகள் இல்லாததால் ஆபத்துகள் அதிகரித்துள்ளன.
ஏப்ரல் மாதத்தில் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக முடக்கியதன் மூலம், இலங்கை தனது வெளிநாட்டுப் பொறுப்புகளைத் தீர்ப்பதை ஒத்திவைத்ததுள்ளது.
எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்வதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளுக்கு மேலும் இடையூறு ஏற்படுத்தியது.
2022 ஆம் ஆண்டில், பொருளாதாரம் 8.7 சதவிகிதம் வீழ்ச்சியடைவதுடன், பணவீக்கம் 60 சதவிகிதத்தை தாண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam