சீனாவின் மேளக்கச்சேரிக்கு இலங்கை தாளம்! மேடையை வீழ்த்த போராடும் இந்தியா, அமெரிக்கா (Video)
சரிவை நோக்கி நகர்ந்து செல்லும் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி தொடர்பாக ஆராய்கின்றது இன்றைய நிஜக்கண்.
இலங்கை ஒரு சிறிய நாடு எனினும் பொருளாதார பின்னடைவுகளை பாரியளவில் சந்தித்துக் கொண்டு வருகின்றது.
அடிமேல் அடி விழுவது போன்று பெற்றோல், சிலிண்டர், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் தாறுமாறாக அதிகரிக்கத் தொடங்கியது.
சீனா இலங்கை மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு கடன்களை வழங்கி அந்நாடுகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயற்சித்து வருவதாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை மேற்குல நாடுகள் முன்வைத்து வருகின்றன.
உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு உதவி எனும் பெயரில் சீனா கடன்களை வழங்கி வருகின்றது. ஏழ்மையான நாடுகளான ஆபிரிக்க நாடுகளுக்கு சீனா கடன்களை வழங்கி இன்று வரை மீள முடியாத வகையில் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது.
சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்த முடியாமையினால், யுகாண்டாவிலுள்ள ஒரேயொரு சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம், அந்த நாட்டு அரசாங்கத்திடமிருந்து இல்லாது போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தன.
எவ்வாறாயினும், யுகாண்டாவின் என்டபே சர்வதேச விமான நிலையத்தை சீனா கையகப்படுத்தியுள்ளதாக வெளியான செய்தியை, கொழும்பிலுள்ள சீன தூதரகம் மறுத்துள்ளது.
விரிவான தகவல்களை இந்த காணொளியில் காணலாம்,
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri