இலங்கை குறித்து உலக நாடுகளுக்கு எச்சரிக்கை! சர்வதேச நாணய நிதியம் தகவல்
இலங்கையின் பொருளாதார நெருக்கடி உலக நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை அறிகுறியாக உள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜிவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில், இன்று G20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களிடம் மத்தியில் உரையாற்றிய ஜோர்ஜீவா, உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் கணிசமாக இருளடைந்துள்ளதாகவும், நிச்சயமற்ற தன்மை அதிகமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

உக்ரைன் போர் தீவிரம்
சர்வதேச நாணய நிதியம் முன்னர் எச்சரித்திருந்த பாதகமான அபாயங்களை இப்போது நிறைவேறியுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ளமையானது, பொருட்கள் மற்றும் உணவு விலைகள் மீது கூடுதல் அழுத்தங்களை செலுத்துகின்றது என்றும் ஜோர்ஜீவா கூறியுள்ளார்.
உலக நிதி நிலைமைகள், முன்னர் எதிர்பார்த்ததை விட இறுக்கமடைந்து வருகின்றன.
இந்தநிலையில், அதிக கடன் அளவுகள் மற்றும் கூடுதல் அழுத்தங்களை எதிர்கொள்ளும் எச்சரிக்கை அறிகுறியாக இலங்கையைத் தவிர வேறு எந்த நாட்டையும் பார்க்க
வேண்டாம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri