இலங்கையின் கோவிட் - 19 நிலவரம்! சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கையில் கோவிட் - 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இறுதியாக இன்று மேலும் 364 பேருக்கு கோவிட் - 19 தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்படி, நாட்டில் இன்று மட்டும் மொத்தமாக 878 பேருக்கு கோவிட் - 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மினுவாங்கொட, பேலியகொட மற்றும் சிறைக் கொத்தணிகளில் கோவிட் - 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் 66,225 ஆக உயர்ந்துள்ளதுடன், நாட்டில் மொத்தம் 70,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரையில், 64,141 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5,729 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன், இலங்கையில் மொத்த கோவிட் - 19 மரணங்கள் 365 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



