மீண்டும் குறையும் ரூபாவின் மதிப்பு..! இலங்கையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளால் ஏற்படவுள்ள மாற்றம்
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார ஸ்திரத்தன்மை தற்காலிகமான நிலையே என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹங்வெல்லவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இடைநிறுத்தப்பட்ட நடவடிக்கைகள்
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், பொருட்களின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் மற்றும் வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்துவது இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார ஸ்திரத்தன்மை தற்காலிகமான நிலையாகவே காணப்படுகிறது.
அதேவேளை நாட்டின் தற்போதைய நிலைமை சீராக இருப்பதாக நம்பவில்லை.
கடனை திருப்பிச் செலுத்தும் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டு, இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், இலங்கை ரூபாவின் மதிப்பு மீண்டும் குறைய வாய்ப்புள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |