இலங்கை ரூபாவின் பெறுமதி குறித்து ஜனாதிபதி கூறியுள்ள விடயம்! செய்திகளின் தொகுப்பு
நாட்டு மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி கூட்டத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்த நேரத்தில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு பொருத்தமான சூழல் ஒன்று இல்லை. அத்துடன் உள்ளூராட்சி தேர்தல் ஒன்றை நடத்துவதனால் பெரிய மாற்றம் ஒன்று வந்துவிடப் போவதில்லை. நாங்கள் ரூபாயை மேலும் வலுவடைய செய்ய வேண்டியதே தற்போது முக்கிய விடயமாகும்.
இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு 4 வருடங்களாகும் என பலர் கூறினார்கள். ஆனால் 8 மாதங்களில் நெருக்கடியை தீர்க்க முடிந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,