டொலரின் பெறுமதி 300 ரூபாய் வரையாவது குறைய வேண்டும்! பேராசிரியர் நவரத்ன பண்டா
தற்போது, நாட்டில் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் நமது செலவு குறைவு. எங்களின் ஏற்றுமதி வருமானம் எஞ்சியிருக்கிறது. வட்டி விகித அதிகரிப்பினாலும் கூட டொலர்களை கோரும் அளவு குறைகிறது என களனிப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் நவரத்ன பண்டா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுவதாவது,
டொலரின் மதிப்பில் குறைவு காட்டப்படலாம். இந்தக் குறைவு ஓரளவுக்கு நல்லதுதான். ஆனால் இது பெரிய மாற்றம் இல்லை. டொலர் குறைய வேண்டுமானால் குறைந்தபட்சம் 300 ரூபாயாக குறைய வேண்டும். அப்போது ஓரளவுக்கு அனுகூலமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனக் கூறலாம்.
ரூபாய் வலுவாக உள்ளது என்று சொல்வதை விட நமது உற்பத்தி, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை ஊக்குவிக்க வேண்டும்.
தற்போது, அரசு அதிகளவில் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நமது ஏற்றுமதியை மேம்படுத்தி, சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டும் என்றாலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தால்தான் அப்போது நாட்டிற்கு நிறைய டொலர்கள் கிடைக்கும்.
ரூபாயின் மதிப்பு வலுப்பெற, பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் திட்டம் அவசியம். தற்போது, டொலர் இல்லாததால், இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது கடினம்.
நடுத்தர மக்களின் வருமானம் இழக்கப்படுகிறது
IMF இடம் பெறுவது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது. 7-8 பில்லியன் டொலர் இருப்பை இழந்த நாட்டில் 2.9 பில்லியன் டொலர்களை வைத்து என்ன செய்ய முடியும்? ஐ.எம்.எப் என்பது இன்னொரு கடன் என்றாலும், கடன் பெறுவதன் மூலம் வெளிநாடுகளின் நம்பிக்கை உருவாகிறது.
வரிவிதிப்பால் நடுத்தர மக்களின் வருமானம் இழக்கப்படுகிறது. இது கீழ்மட்ட வகுப்பினரை பாதிக்கிறது. நடுத்தர வர்க்கத்தினர் ஒடுக்கப்படுவதுதான் பிரச்சினை.
உள்நாட்டு விவசாயம், சிறு, மற்றும் நடுத்தர விவசாயத்தில் கவனம் செலுத்தி, ஏற்றுமதியின் தரத்தை உயர்த்தி, கைத்தொழில் பொருட்களை உற்பத்தி செய்ய முடிந்தால், டொலர் பற்றி எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
நாம் இன்னும் மூலப்பொருளை ஏற்றுமதி செய்யும் நிலையில் இருக்கிறோம். சர்வதேச சமூகம் எங்களிடம் பொருட்களைக் கோரும் நிலைக்கு நமது பொருளாதாரம் கொண்டுவரப்பட வேண்டும். நாட்டுக்காக நேர்மையாக உழைக்க வேண்டும். தேர்தலுக்காக பிரபலமான முடிவுகளை எடுக்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

ரோலெக்ஸ் சூர்யாவை தூக்கி சாப்பிடும் அளவிற்கு லியோ படத்தில் களமிறங்கும் கேமியோ.. யார் நடிக்கிறார் தெரியுமா Cineulagam

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri

மகனின் உயிர் பிரிந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களின் அருவருப்பான செயல்., பெற்றோர் வேதனை News Lankasri
