நெருங்கும் புதுவருடப்பிறப்பு: அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு பிரவேசிக்கும் மக்கள்
2025ஆம் புது வருடப் பிறப்புக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளநிலையில், பொதுமக்கள் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு சந்தைக்கு அதிகளவில் பிரவேசிப்பதை காணக்கூடியதாக உள்ளது.
இதன்போது, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.
அரிசி தட்டுப்பாடு
இவ்வாறான பின்னணியில் சந்தையில் பல்வேறு அசௌகரியங்களை நுகர்வோர் எதிர்நோக்கி வருகின்றனர்.
இதேவேளை, தனியார் துறையினரால் இதுவரை 75,000 மெற்றிக் டொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தனியார் தரப்பினருக்கு அனுமதி வழங்க மேற்கொண்ட தீர்மானத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 32,000 மெற்றிக் டொன் பச்சை அரிசியும், 43,000 நாடு அரிசியும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |