பங்களாதேஷ் வழங்கிய கடனை மீள செலுத்திய இலங்கை
பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் டொலர்கள் கடனில் ஒரு பகுதியாக 50 மில்லியன் டொலர்களை மீள செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளபோதே இந்த கடன் பெறப்பட்டது.
எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்குள் மற்றொரு தவணை செலுத்தப்படும், எனினும் இரண்டாவது தவணையாக இலங்கை எவ்வளவு செலுத்தப்படும் என தெரிவிக்கப்படவில்லை.
முழு கடனையும் மீள செலுத்த நடவடிக்கை
இந்த ஆண்டு செப்டம்பருக்குள் 200 மில்லியன் டொலர் தொகையை மீள செலுத்திவிடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் நாணய மாற்று ஒப்பந்தத்தின் கீழ் மூன்று தவணைகளில் இலங்கைக்கு பணத்தை கடனாக வழங்கியது.
முதல் தவணையில் 50 மில்லியன் டொலர்களும் இரண்டாவது தவணை $100 மில்லியன் டொலர்களும் மீதமுள்ள $50 மில்லியன் டொலர்கள் 2021 செப்டம்பர் இல் அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
