பணவீக்க சுட்டெண்ணில் இலங்கை மூன்றாம் இடத்தில்
உலக பொருளாதார நிலைமை தொடர்பாக ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் மாதாந்தம் வெளியிடும் பணவீக்க அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் சிம்பாப்வேவுக்கு அடுத்து இருந்த இலங்கை
இந்த பணவீக்க அறிக்கைக்கு அமைய கடந்த மாதம் இரண்டாவது இடத்தில் இருந்த இலங்கை இந்த மாதம் மூன்றாவது இடத்தில் உள்ளது என பணவீக்க சுட்டெண்ணில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
In this week's inflation table, #Egypt takes the 17th place. On July 7, I measured Egypt's #inflation at a stunning 30%/yr, 2x the official inflation rate of 15%/yr. pic.twitter.com/hU4AJcDnVX
— Steve Hanke (@steve_hanke) July 11, 2022
ஜூன் மாதம் இலங்கையின் பணவீக்கம் 54 வீதமாக பதிவாகியுள்ளது. கடந்த மாதம் மூன்றாவது இடத்தில் இருந்த துருக்கி இந்த மாதம் இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளது.
சிம்பாப்வே தொடர்ந்தும் பணவீக்க சுட்டெண்ணில் முதலாவது இடத்தில் இருந்து வருகிறது. அந்த நாட்டின் பணவீக்கம் 191.60 வீதமாக பதிவாகியுள்ளது.
பாகிஸ்தானின் பணவீக்கம் 21 வீதமாக பதிவாகியுள்ளதுடன் அந்த நாடு பணவீக்க சுட்டெண்ணில் 12 வது இடத்தில் உள்ளது.
ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான ஸ்டீவ் ஹென்க்கின் பணவீக்க சுட்டெண் உலகில் பிரதானமான பணவீக்க ஆய்வு அளவுகோலாக கருதப்படுகிறது