பட்டினியால் வாடும் நாடுகள் வரிசையில் இலங்கை
உலகில் மிகவும் பட்டினியால் வாடும் நாடுகள் வரிசையில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பாரதூரமான உணவு நெருக்கடியால் வாடுவதாக உலக உணவுத்திட்டத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
உணவு நெருக்கடி ஜனவரி மாதம் வரை தொடரும்
உலக உணவுத்திட்டம் கடந்த ஜூன் மாதம் முதல் முறையாக இலங்கையை பட்டினியால் வாடும் நாடுகள் பட்டியலில் சேர்த்தது. இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் எதிர்வரும் ஜனவரி மாதம் வரையான காலப்பகுதியில் இலங்கை உட்பட உலகில் 19 நாடுகளில் உணவு பாதுகாப்பற்ற நிலைமை தொடரும் என உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கை உட்பட 7 நாடுகளின் நிலைமை
கடுமையான உணவு பாதுகாப்பற்ற நிலைமை நிலவும் நாடுள் வரிசையில் ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, நைஜீரியா, தென் சூடான், சோமாலியா, ஏமன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளதுடன் இலங்கை அந்த ஆபத்தை எதிர்நோக்கி வருவதாக சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.
ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமித்துள்ளமை, காலநிலை மாற்றம், பிராந்திய மோதல்கள் மற்றும் தொற்று நோய் நிலைமை என்பன இந்த உணவு நெருக்கடிக்கு காரணமாகி இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
