கொழும்பில் ஒன்றுதிரண்ட பெருமளவிலானோர்! முடிவுக்கு வந்த போராட்டம்(Video)
புதிய இணைப்பு
கொழும்பு - ராஜகிரிய பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணையகத்திற்கு முன்பாக தேசிய மக்கள் சக்தியினர் பாரிய போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
மக்கள் ஆணைக்கு இடம்கொடு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்து என்று வலியுறுத்தி இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதிகளவான மக்கள், தொழிற்சங்கத்தினர் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கென, நீர்த்தாரைப் பிரயோக வண்டிகளும், கலகத்தடுப்பு பிரிவினரும் தயார் நிலையில் உள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
மேலும், பெருமளவான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |















Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
