உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு நீதி கோரி கொழும்பில் ஒன்று திரண்ட மக்கள்(Video)
2019ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதலுக்கு நீதி கோரி இன்று கொழும்பில் அமைதியான போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நீதிக்கான கட்சி சார்பற்ற மக்கள் ஒன்றியத்தினர் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட வேண்டும்..
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.
அத்துடன், குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை வெளி உலகிற்கு காட்ட வேண்டும் என கோரியும், நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் தொடர் கைதுகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.