நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள மே9 அறிக்கை
கடந்த மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான விசேட குழுவின் அறிக்கை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோனினால் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கடந்த மே 9 கலவரம்

கடந்த மே மாதம் 9ஆம் திகதி மற்றும் அதனை அண்மித்த நாட்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலான விசேட குழுவின் அறிக்கை செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாகவும், அதற்கமைய அதனை அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு தொடர்பான அமைச்சர்களது ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்திற்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கர்ணகொட, முன்னாள் விமான படைத் தளபதி மார்ஷல் ரொஷான் குணதிலக்க, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோரைக் கொண்ட குழுவின் அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்த அறிக்கையின்படி, படையினர் தரப்பில் குறைபாடுகள்
ஏற்பட்டிருந்தால் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri