இரவு வேளையில் தீப்பந்தங்களுடன் வீதிக்கு இறங்கிய மக்கள்
மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
இந்தநிலையில், நேற்றையதினம்(21.11.2023) இரவு பாணந்துறை - ஹொரன வீதியில் ஒன்று திரண்ட மக்கள் மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மக்கள் போராட்டம்
இதன்போது, கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியிருந்ததுடன், தங்களது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தும் வகையில் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
மக்கள் போராட்ட இயக்கத்தினரின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்றது.
இதேவேளை, மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக கண்டியிலும் பொதுமக்கள் தங்களது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
நேற்றையதினம் இரவு வேளையில் தீப்பந்தங்களுடன் வீதிக்கு இறங்கிய மக்கள் மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



