பயங்கரவாதத் தடைச் சட்டம் உடன் ஒழிக்கப்பட வேண்டும்: மைத்திரி வலியுறுத்தல்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று சந்தேகிக்கப்படும் நபர்களைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்வது நல்ல விடயமல்ல என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவசியமற்ற பயங்கரவாதத் தடைச் சட்டம்
நாட்டின் தற்போதைய நிலைமையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் அவசியமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
கொள்கை ரீதியாக மாற்றியமைக்கப்பட வேண்டும்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை கொள்கை ரீதியாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதில் தாம் உடன்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் 1979ஆம் ஆண்டு ஆறு மாத காலத்திற்கு தற்காலிக ஏற்பாடுகளாக கொண்டுவரப்பட்டது. ஆனால் இச் சட்டம் இலங்கையின் சட்டப் புத்தகங்களில் 43 வருடங்களாக உள்ளது.
இச் சட்டத்தினை நீக்க வேண்டும் என பலரும் காலம் காலமாக வலியுறுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 17 மணி நேரம் முன்

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
