ஆபத்தில் முடியும் அரியநேத்திரன் மீதான நடவடிக்கை
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நாட்டின் அடுத்த தலைவரை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
பிரதான வேட்பாளர்கள் அனைவரும் தங்களது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில் ஒருவரை மாற்றி ஒருவர் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வருவதால் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இலங்கை அரசியல் களம் நகர்கின்றது.
இது இவ்வாறு இருக்க வடக்கு - கிழக்கு தமிழர் தரப்பில் இருந்து பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டுள்ள விடயம் ஒரு சாராரிடத்தில் வரவேற்பையும், ஒரு சாராரிடத்தில் விமர்சனங்களையும் தோற்றுவித்துள்ளது.
இந்த நிலையில், பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரன் குறிப்பிட்ட சதவீதத்திற்கு மேலதிகமாக வாக்குகளைப் பெற்று விட்டால் இன்று விமர்சிக்கும் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் உள்ளிட்டோர் பதவி விலகுவார்களா என்று கேட்டால் நிச்சயமாக அது நடைபெறாது என்று பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுமந்திரன் நினைப்பது போல மக்கள் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |