உத்தியோகபூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கும் அநுர தரப்பு
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பதவியேற்பு விழா தொடர்பான நடவடிக்கைகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமார திசாநாயக்க முன்னிலை வகித்துக் கொண்டிருக்கின்ற போதும், ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெறுவதற்கான ஐம்பது வீத வாக்குகளை இன்னும் அவர் பெற்றுக் கொள்ளவில்லை.
ஒத்திவைக்கப்படும் பதவி ஏற்பு விழா
இந்நிலையில் அநுரகுமாரவின் வெற்றி தொடர்பில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தி, அது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும்வரை பதவி ஏற்பு விழா தொடர்பான ஏற்பாடுகளை ஒத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
இன்று அல்லது நாளை நிச்சயம் அநுரகுமாரவின் பதவியேற்பு வைபவம் நடைபெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போதைக்க முன்னெடுக்கப்பட்டு வரும் வாக்கெண்ணும் செயற்பாடுகள் நம்பகமான முறையில் முன்னெடுக்கப்படுவதாகவும் பிமல் ரத்நாயக்க மேலும் சுட்டிக்காட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |