வடக்கு - கிழக்கு, மலையகத்தில் சஜித்துக்குத்தான் பெரும் ஆதரவு : அஜித் பி பெரேரா
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் சஜித் பிரேமதாஸவுக்குத்தான் பெருவாரியான
ஆதரவு உள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ நிச்சயம் வெற்றி பெறுவார். அவர் முதல் சுற்றிலேயே 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று விடுவார்.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு இல்லை. ரணிலாலும் முன்னோக்கிச் செல்ல முடியாது.
அனைத்து இன மக்களின் ஆதரவும் சஜித்துக்குத்தான் உள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ வெற்றி பெற்றால் 23 அல்லது 24 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும். இடைக்கால அரசொன்று ஸ்தாபிக்கப்படும். ஆளுநர் பதவிகளில் மாற்றம் செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
