நாமல் மற்றும் சஜித்தின் இரகசிய ஒப்பந்தம்! பின்னணியில் தனியார் தொலைக்காட்சி
நாமல் ராஜபக்ஷவும் சஜித் பிரேமதாசவும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் உதவியுடன் இரகசியமாக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.
ஹினிதும பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சுதந்திரமாக வாழ்வதற்கான வழி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான வழியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே(Ranil Wickremesinghe) காட்டினார். எனவே செப்டம்பர் 21ஆம் திகதி தவறான தீர்மானம் எடுக்கும் பட்சத்தில் நாடு பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும்.
சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்ற எந்த நாடும் முன்னேறியதில்லை என்று கூறிவந்த அனுரகுமார திசாநாயக்க, இன்று மக்கள் ஆதரவு படிப்படியாக குறையும் வேளையில் வியாபாரிகள் முன்னிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பாடுவதாக கூறுகிறார்.
அதனால் அனுரகுமாரவின் போலியான வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக மக்களுக்கு தெரிய ஆரம்பித்துள்ளது.
அதேபோல் இன்று நாமல் ராஜபக்ஷவும் சஜித் பிரேமதாசவும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் உதவியுடன் இரகசியமாக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
