ரணிலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் தரப்பினர்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காக நிபந்தனையில்லாமல் ஆதரவு வழங்கி புதிய அரசியல் கூட்டணியை அமைத்துள்ளோம் என வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தள்ளார்.
கம்பஹா பகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் வரிசை யுகம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் போது ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானங்களுக்கு எவ்விதமான நிபந்தனையில்லாமல் ஒத்துழைப்பு வழங்கினோம்.

பொருளாதார மீட்சிக்காக எடுத்த தீர்மானங்கள் வெற்றிப் பெற்றுள்ளன. குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சிப் பெற்றுள்ளோம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காக நிபந்தனையில்லாமல் ஆதரவு வழங்கி புதிய அரசியல் கூட்டணியை அமைத்துள்ளோம்.
பொருளாதார நெருக்கடிக்காக தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மறுசீரமைத்தால் நாட்டில் மீண்டும் வரிசை யுகம் தோற்றம் பெறும் என்பதை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பரீட்சித்துப் பார்க்கும் நிலையில் நாடு இல்லை.

ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் பொருளாதார கொள்கை நடைமுறைக்கு சாத்தியமற்றது.
பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு நாட்டு மக்கள் சிறந்த அரசியல் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri