அரச ஊழியர்களுக்கு 25ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கிடைக்குமா..! எழுந்துள்ள கேள்வி
10ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதென்ற ரணில் விக்ரமசிங்கவினால்(Ranil Wickremesinghe) எப்படி அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முடியும் என்று கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்(Saidulla Marikkar) கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு(Sajith Premadasa) ஆதரவாக மொரட்டுவை பகுதியில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வாழ்க்கைச்செலவு அதிகரித்துள்ள நிலையில் அரச ஊழியர்கள் தங்களின் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவகையில் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளுமாறு தெரிவித்து கடந்த சில மாதங்களாக போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
குறிப்பாக அதிபர் ஆசிரியர்கள் வீதிக்கிறங்கி போராட்டம் மேற்கொண்டுவந்தனர். ஆனால் அவர்களின் எந்த கோரிக்கையையும் நிறைவேற்ற இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதேநேரம் அரச ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு மேற்கொண்டால் வரி வீதத்தை 20வீதம் வரை அதிகரிக்க நேரிடும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் இவ்வாறு தெரிவித்து மக்களை எச்சரித்த ஜனாதிபதி தற்போது அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் 25ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதாக தெரிவிக்கிறார்.
சஜித் பிரேமதாசவுக்கே வாக்குகள்..
ஜனவரியாகும்போது ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருக்கமாட்டார் என்பதாலே அவர், ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்குவதாக தெரிவித்து வருகிறார்.
ஜனாதிபதியின் இந்த ஏமாற்று வாக்குறுதியை அரச ஊழியர்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை. 10ஆயிரம் ரூபா வழங்க முடியாது என தெரிவித்த ஜனாதிபதி, எப்படி
25ஆயிரம் வழங்குவார் என கேட்கிறோம். எப்படியாவது அரச ஊழியர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளவே ஜனாதிபதி முயற்சித்து வருகிறார்.
ஆனால் அரச ஊழியர்களின் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து குரல்கொடுத்துவரும் சஜித் பிரேமதாசவுக்கே அரச ஊழியர்கள் இந்த முறை தங்களின் வாக்குகளை வழங்குவார்கள் என்பது நிச்சயமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
