வெளிநாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்திய கோட்டாபய:வெளிவரும் தகவல்கள்-அரசியல் பார்வை
கோட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேறிமைக்கு, வெளிநாட்டு கொள்கையும் காரணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், வெளிவிவகார கொள்கையை முறையாக கடைபிடிக்காமை காரணமாகவே,கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
அத்துடன், பொருளாதாரம் தொடர்பிலான முறையான ஆலோசனைகளை அவர் ஏற்றுக்கொள்ளாமையும் ஆட்சியின் வீழ்ச்சிக்கு பிரதான காரணமாகும்.
இதன் ஒட்டுமொத்த பிரதிபலனாகவே கோட்டாபய ராஜபக்சவிற்கு உதவுவதிலிருந்து அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பின்வாங்கிக்கொண்டன.
ஆகையினால் தவறுகளை உணர்ந்து நாங்கள் மீளெழுவதற்கான சந்தர்ப்பத்தை இனங்காண வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது அரசியல் பார்வை தொகுப்பு,