அநுரகுமார ஜனாதிபதியானால் அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்வார்: திஸ்ஸ குட்டியாராச்சி எம்.பி.
ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றி பெறும் பட்சத்தில் நாட்டை ஆள முடியாமல் தற்கொலை செய்துகொண்ட ஜனாதிபதியாக வரலாற்றில் இடம்பிடிப்பார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, "ஜே.வி.பி. இரட்டை நிலைப்பாட்டைப் பின்பற்றி வருகின்றது என்பது தற்போது உறுதியாகின்றது. அக்கட்சியினரால் போலிக் கருத்துக்களே சமூகத்தில் விதைக்கப்படுகின்றன.
எனவே, உண்மையை சொல்லி நாட்டைப் பொறுப்பேற்குமாறும், பொய்களை நிறுத்துமாறும் நாம் கோருகின்றோம்.

ஜனாதிபதியானால் அழுத்தம்
இலங்கை வரலாற்றில் மன்னர்களுக்கு பிறகு, அழுத்தம் காரணமாக நாட்டை ஆள முடியாமல் ஓடிய தலைவர்தான் கோட்டாபய ராஜபக்ச. அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி ஆகமாட்டார் என்பது உறுதி.
சிலவேளை கனவிலாவது அவர் ஜனாதிபதியானால் அழுத்தம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட ஜனாதிபதியாக வரலாற்றில் இடம்பிடிப்பார்.
ஏனெனில் அவர் அந்தளவுக்கு பொய்யுரைக்கின்றார். அத்துடன், இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு ஜே.வி.பியின் கொள்கைகளை அநுரகுமார திஸாநாயக்க காட்டிக்கொடுத்துள்ளார்.”என தெரிவித்தார்.
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri