தேர்தல் பிரசாரத்திற்கு நாட்டு மக்களிடம் பணம் கோரும் அரசியல்வாதி
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகுதி எனக்கும் உள்ளது.தேர்தல் பிரசாரத்துக்கு நாட்டு மக்கள் செலவு செய்தால் தேர்தலில் போட்டியிட நான் தயார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
களுத்துறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கோட்டாபயவை பதவியில் இருந்து விரட்டியடித்தார்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தீர்மானமிக்கதாகும்.தேர்தலுக்கு நானும் தயார் என்று பலர் தற்போது களமிறங்கியுள்ளார்கள். தொழிலதிபர்களும் களமிறங்கியுள்ளார்கள். அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒருவர் ஜனாதிபதியாகினால் எவ்வாறான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதற்கு கோட்டபய ராஜபக்ச சிறந்த எடுத்துக்காட்டு.
அரச தலைவர் பதவிக்கு கோட்டபய ராஜபக்ச தகுதியற்றவர் என்பதை நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன். எனது கருத்தை நாட்டு மக்கள் பொருட்படுத்தவில்லை.
2 ஆண்டுகளுக்கு பின்னர் தவறான அரசியல் தீர்மானத்தை உணர்ந்து கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து விரட்டியடித்தார்கள்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகுதி எனக்கும் உள்ளது.தேர்தல் பிரசாரத்துக்கு நாட்டு மக்கள் செலவு செய்தால் தேர்தலில் போட்டியிட நான் தயார்.
இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தோல்வியடைவார் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும். ஆளும் தரப்பால் களமிறக்கப்படும் வேட்பாளர் படுதோல்வியடைவார்.
தேர்தலை இலக்காகக் கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிவாரணம் வழங்கி வாக்குகளை பெறும் காலம் முடிவடைந்து விட்டது என்பதை ஜனாதிபதி உட்பட அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
