இன்று வரை அடிமைப்பட்டு கிடக்கும் தமிழர்கள்! தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர்
இலங்கைத்தீவு பூகோள ஆதிக்கத்தில் சிக்குண்டு இருப்பதனால் வருகின்ற வல்லரசுகளாலும் இந்த நாட்டை ஆளுகின்ற அரசுகளாலும் இன்று வரையும் தமிழர்கள் அடிமையாக்கப்பட்டு வருகின்றனர் என்று என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் த. சுரேஸ் தெரிவித்தார்.
தியாக தீபம் அன்னை பூபதியின் 38 வது நினைவேந்தல் மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் மட்டக்களப்பு நாவலடியில் உள்ள அன்னாரது நினைவு தூபியில் சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.
அரசியல் அபிலாசை
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவதற்காக தமிழர்கள் தொடர்ச்சியாக இந்த போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் எனவே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுமுகமாக எந்த தலைமைத்துவம் முன்நிற்கின்றதே அந்த தலைமைத்துவத்தை மக்கள் ஆதரிக்க வேண்டும்
இந்த தீவில் சிங்களவர்களால் தமிழர்களை அடக்கி ஒடுக்கப்படுகியவேளை தமிழர்கள் தாயக நிலப்பரப்பில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக அப்போது பல போராட்ட இயக்கங்கள் மற்றும் அமைப்புக்கள் குரல் கொடுத்து இந்திய அரசுக்கு எடுத்து கூறினர்.
இந்திய வல்லரசு
அப்போது இலங்கையில் ஒரு அமைதியை நிலை நாட்டுவதற்காக இந்திய வல்லரசு ஜபிகே என்ற இராணுவத்தை அனுப்பி சமாதானத்தை நிலைநாட்டுவதாக வந்து எங்களது மக்களை அவர்கள் வந்து நோக்கத்துக்கு எதிர்மாறாக தமிழர்களை அடக்கி ஒடுக்கி செயற்பட்டனர்.

அந்த காலப்பகுதியில் தமிழர்களுக்காக உறுதியாக நின்ற விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்தது.
அதன்போது புலிகளுக்கும் இந்திய வல்லரசுக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு ஒரு ஆயுத போராட்டம் இடம்பெற்றது இதன்போது வடக்கு கிழக்கில்; இருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் கைது செய்து துன்புறுத்தி கற்பழித்து படுகொலை செய்தனர் என குறிப்பிட்டார்.
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri
முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri