ரணிலை மடக்க பசில் போட்ட திட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கச் செல்லும் போது தனித்தனியாகச் செல்வதை விட முழுக் குழுவாகச் செல்வதே சிறந்தது என பசில் ராஜபக்ஷ தெரிவித்ததாக பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பசிலின் திட்டம்
நாங்கள் ஒரு கட்சியாக பலமாக உள்ளோம், ஒன்றிணைந்து நிற்பதே எமது பலம் என பசில் ராஜபக்ச தெரிவித்ததாக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஏதாவது ஒரு கோரிக்கை அல்லது கலந்துரையாடலு்ககு தனித்தனியாக செல்வதனை விடவும் குழுவாக செல்வது வலு சேர்க்கும். அப்போது எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வாய்ப்புகள் அதிகம். இது குறித்தே பசில் ராஜபக்சவும் கூறியுள்ளார்.
குழுவாக செல்லத் தீர்மானம்
உண்மைகளை தெளிவுபடுத்துவது போன்று குழுவாக ஒன்றாகச் செயற்படுவதே பலம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். .

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
