பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியி்ல் இடைக்கால வரவு செலவுத்திட்டம் இன்று நாடாளுமன்றத்தில்....
இந்த வருடத்திற்கான இடைக்கால வரவு செலவுத்திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிதியமைச்சர் என்ற வகையில் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு கூடவுள்ளது. பிற்பகல் ஒரு மணி முதல் 2 மணி வரை ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தை முன்வைப்பதை அடுத்து நாடாளுமன்றம் நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்படும்.
இடைக்கால வரவு செலவுத்திட்டம்
நாளை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை காலை 8.30 முதல் மாலை 5.30 வரை மதியபோசன இடைவேளை இன்றி நிதி ஒதுக்கீட்டு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
மூன்றாவது வாசிப்பின் பின்னர் இந்த திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்படும்.
நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடிக்கு மத்தியில் இடைக்கால வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்படுகிறது. இதில் நாட்டு மக்களுக்கு பல நிவாரண திட்டங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.