ரணிலுக்கு எதிராக மகிந்த பிறப்பித்துள்ள உத்தரவு - கைவிரிக்கும் விசுவாசிகள்
அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு ஆதரவளிப்பதை தவிர்க்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியலமைப்பின் 22வது திருத்தத்தின் ஊடாக 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளமையினால் இதனை எதிர்க்க வேண்டும் என மகிந்த தனது சகாக்களுக்கு வலியுறுத்தியுள்ளதாக, பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
13ஆவது திருத்தச் சட்டம்

இதனால், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அண்மையில் தேசிய பேரவையின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
புலம்பெயர் மக்களின் நலனுக்காக 13வது திருத்தத்தை அமுல்படுத்துவது நாட்டுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியிடம் விரிவாக விளக்கமளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை 22ஆவது திருத்தத்தின் ஊடாக அமுல்படுத்தினால் அதற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan