ஜனாதிபதி ரணிலை பாதுகாப்போம்: ஆளுங்கட்சி சூளுரை - செய்திகளின் தொகுப்பு
கோட்டாபய ராஜபக்சவுக்கு நடந்தது போல, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நடப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம், அவரை பாதுகாப்போம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
அடுத்த இரண்டரை வருடங்களுக்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.
அடுத்துவரும் மாதங்களில் பொருட்களின் விலைகள் குறையும். அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும்.
எதிரணிகள் மாறுபட்ட நிலைப்பாடுகளை கொண்டிருக்கலாம். ஆனாலும் ஒரு விடயத்தை தெளிவாக கூறி வைக்க விரும்புகின்றோம்.
இது தொடர்பிலான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு...



