ரணிலின் ஆளுமையால் சரியான பாதையில் செல்லும் இலங்கை
நாடு தற்போது சரியான பாதையில் பயணிப்பதாக ஜனாதிபதி பணியாளர் குழாம் தலைமை அதிகாரியும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சரியான தீர்மானங்களை அச்சமின்றி மேற்கொள்வதே இதற்கான காரணமாகும்.
மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்காத வகையில் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன் ஜனாதிபதி இவ்வாறான தீர்மானங்களை மேற்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் கிழக்கு கொழும்பு மற்றும் மேற்கு கொழும்பு ஆசன செயற்குழு கூட்டங்களில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கை மீதான வெளிநாட்டவர்களின் நம்பிக்கை மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திடம்
நாட்டை முன்னேற்றுவதற்கான திட்டம் காணப்படுவதாக சாகல ரட்நாயக்க
சுட்டிக்காட்டினார்.