ஊழல் விடயத்தில் ஜனாதிபதிக்கும் விடுபாட்டுரிமை கிடையாது! விஜேதாச ராஜபக்ச
ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தில் ஜனாதிபதிக்கும் இனி வரும் காலங்களில் விடுபாட்டுரிமை இருக்காது என்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தில் ஜனாதிபதி, ஆளுநர்கள், சுயாதீன ஆணைக்குழுக்களின் ஆணையாளர்கள், தூதுவர்கள் மற்றும் ஏனையோரை உள்ளடக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஊழலை தடுக்க இந்த வரவு செலவு அலுவலகம் மிகவும் முக்கியமானது
எதிர்காலத்தில் சொத்துக்கள் மற்றும் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியவர்களில் முதலமைச்சர்கள், மாகாண சபை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தூதரகங்களின் நிறைவேற்று அதிகாரிகள் ஆகியோரும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் ஒழிப்பு சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கலாநிதி விஜயதாச ராஜபக்ச தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, ஊழல் தடுப்புச் சட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை அல்ல. நாடாளுமன்றத்தின் வரவு செலவு அலுவலகம் அப்படியல்ல. ஊழலை தடுக்க இந்த வரவு செலவு அலுவலகம் மிகவும் முக்கியமானது.
இதன்போது எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிடுகையில், இந்த சட்டம் கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் பின்னோக்கிச் செல்ல வேண்டும். இங்கு அப்படி எதுவும் இல்லை என்று மூத்த வழக்கறிஞர்கள் என்னிடம் தெரிவித்தனர் என்றார்.
அதனையடுத்து அமைச்சர் விஜயதாச ராஜபக்ச குறிப்பிடுகையில், அதுபற்றி சட்டமா அதிபரிடம் கருத்து கேட்கிறோம். அனைத்து எம்.பி.க்களுடன் விவாதிக்க தயார் என தெரவித்தார்.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
