தமிழர் தரப்பின் பிழையான முடிவில் சர்வதேசத்தில் ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்து - அரசியல் ஆய்வாளர் (VIDEO)
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்க எடுத்த முடிவானது மிக மிக மோசமான அரசியல் அறிவீனமாக பார்க்கப்பட வேண்டிய விடயம் என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச அரசை காப்பாற்றுவதற்காகவே ரணில் விக்ரமசிங்க,டலஸ் அழகப்பெரும ஆகியோர் களத்தில் இறங்கியுள்ளனர். இது அவர்களின் ராஜதந்திர அரசியல் விளையாட்டு இதனை புரிந்துக்கொள்ள முடியாத நிலையிலேயே தமிழர் தரப்பு டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதவு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில்,முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு காரணமான கட்சியை சேர்ந்த அனுசரணையாளர்களையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தற்போது ஆதரித்துள்ளது.
அதாவது தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் தற்போது எதிரிகளோடு கைக்கோர்த்துள்ளமையானது சர்வதேசத்தில் ஈழத்தமிழர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,