ஜனாதிபதி ரணில் தொடர்பில் இந்திய தூதரகத்திற்கு தெரியாத இரகசியம் ரோவிடம்! விளக்கமளிக்கும் அசாத் சாலி (Video)
2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் நாட்டில் தேசிய பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய பாதுகாப்பு அவசியம் எனக் கூறித்தான் 69 இலட்சம் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றையதினம் ஒரு கலந்துரையாடலில் டலஸ், ஜீ.எல்.பீரிஸ் அதேபோன்று சஜித் பிரேமதாச அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும், அந்த கூட்டத்தின் முடிவிலே டலஸை அவர்கள் ஆதரிப்பதாகவும், கூட்டமைப்பின் முடிவு டலஸை நோக்கிச் சென்றிருந்தது.
அந்த கலந்துரையாடல் நடைபெற்ற போது அங்கு முக்கியமான ஒரு விடயம் இடம்பெற்றிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இந்தியாவில் இருக்கும் முக்கியமான ஒரு அதிகாரி ஒருவர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டதாகவும், அங்கு முக்கியமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
எனினும் தற்சமயம், இலங்கையில் இருக்கும் இந்திய தூதரகம் அதனை மறுத்திருக்கின்றது. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.”
இதற்கு பதிலளித்த அசாத் சாலி, அந்த விடயம் இந்திய தூதரகத்திற்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் ரோவுக்குத் தெரியும் என்று நினைக்கின்றேன். ஆனால் கூட்டமைப்பில் இருந்து ஐவர் ரணிலிக்கு வாக்களித்தது உண்மை என கூறினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,