இராணுவம் வகுத்த பெரும் திட்டம்! அதிகாரத்துடன் சவேந்திர சில்வா: இராணுவ ஆய்வாளர் (Video)
கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டமை மற்றும் அதற்கு முன்னரான அரசியல் நிகழ்வுகளில் பாரிய அரசியல் நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டிருக்கின்றது என இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
கோட்டாபயவின் பதவியை வைத்துக் கொண்டு தற்போதைய சூழ்நிலைகளை தமக்கு சாதகமாக அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்கின்றார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவியை தன்னுடையதாக்கிக் கொள்வதற்குரிய அனைத்து வேலைகளையும் செய்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை இராணுவத்தினரின் திட்டங்கள் மற்றும் அவர்களின் செயற்பாடு குறித்தும் முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும் கலாநிதி அரூஸ் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,