தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொய்யான வாக்குறுதிகள்:வெளிவரும் தகவல்-செய்திகளின் தொகுப்பு
புதிய அரசமைப்பை நிறைவேற்றுவோம், அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவோம் என்று பொய்யான வாக்குறுதிகளை வழங்கி தமிழ் மக்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் மீண்டும் ஏமாற்ற ரணில்–ராஜபக்ச அரசு முயற்சிக்கின்றது. ஆனால், அது சரி வராது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
‘புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வே தமிழ் மக்களின் பிரதான எதிர்பார்ப்பு. அதை நாம் நிறைவேற்றியே தீருவோம்’என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த போதே சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரணில்–ராஜபக்ச நிலையான அரசு அல்ல. இது ஆட்டம் காணும் அரசு. இந்த அரசின் பொய்யான வாக்குறுதிகளை நம்ப சம்பந்தனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் முட்டாள்கள் அல்லர்.
அதேவேளை, ராஜபக்சக்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நம்பத் தமிழ் மக்கள் தயாராகவில்லை.
மலரவுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஆட்சியில் அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நாம் தீர்வுகளை வழங்கியே தீருவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri