ராஜபக்சக்களுடன் இணைந்து மாறிய ரணில் விக்ரமசிங்க
அன்றைய ரணில் விக்ரமசிங்க இன்று இல்லை. ராஜபக்சர்களுடன் இணைந்து செயற்படும் ரணில் விக்ரமசிங்கவே இன்று இருக்கின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அன்றைய ரணில் விக்ரமசிங்க இன்றில்லை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஊடக ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் தொடர்பில் அரசாங்கத்துக்குள்ளும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் பழங்குடி மக்கள் வாழ்ந்ததை போன்ற முறைமையொன்றை உருவாக்குவதற்காகவே ராஜபக்ச குழுக்களுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார்.
ஊடகங்களை கையகப்படுத்தும் செயற்பாட்டுக்கும், மக்களின் கருத்து தெரிவிக்கும் உரிமைக்கும் எதிராக, ஊடக சுதந்திரத்தை இல்லாமல் செய்யும் செயற்பாட்டுக்கும் நாம் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். அவ்வாறு ஒன்றில்லை.
சட்டத்தை நீக்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுவதை நாம் கண்டோம். அன்றைய விக்ரமசிங்க இன்றில்லை என்றே நாம் கூறுகிறோம். ராஜபக்சக்களுடன் இணைந்து செயற்படும் ரணில் விக்ரமசிங்கவே இன்றிருக்கிறார். தன்னை அவர் பெடரர் போன்று காட்டிக்கொண்டாலும் அவரது செயற்பாடுகள் அனைத்தும் வேறு விதமாகவே காணப்படுகிறது என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 நிமிடங்கள் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
