நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் பாதுகாப்புடன் சொகுசு வாழ்க்கை வாழும் கோட்டாபய!
நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் இருப்பது முற்றுமுழுதாக ராஜபக்சர்களின் கையாட்களாவர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தலைவராக சாகர காரியவசம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டை வங்குரோத்தடையச் செய்து, வறுமையிலுள்ள மக்களின் எண்ணிக்கையை 70 இலட்சமாக்கி பின் கதவின் ஊடாக கடந்த ஆண்டு இந்த தினத்தில் தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ச இன்று நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவ, பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன் அதிசொகுசு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் இருப்பது முற்றுமுழுதாக ராஜபக்சர்களின் கையாட்களாவர்.
பசில் ராஜபக்சவுக்கு மிக நெருங்கியவரும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளருமான சாகர காரியவசம் இதன் தலைவராகக் காணப்படுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது? கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சிமன்றங்களுக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்கி, ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் வகையிலான பிரேணையை முன்வைக்க முயற்சித்த கெடகொட இக்குழுவின் பிரிதொரு உறுப்பினராவார்.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த 9 உறுப்பினர்கள் இதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இது கேலிக்குரிய விடயமாகும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இது புரியவில்லையா?
நாட்டில் ஓரளவு ஸ்திர நிலைமை ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அது தற்காலிகமானதே. இதனை நிலையானதாக்குவதற்கு அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 10 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
