அரசியல் போலித்தனம் தொடர்பில் கேள்வி எழுப்பும் வடமாகாண மக்கள்
வடமாகாண தமிழ் மக்கள் தமது அரசியல்வாதிகளின் போலித்தனத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நினைவேந்தல்
1987 ஆம் ஆண்டு கொக்குவிலில் இந்திய அமைதி காக்கும் படையினரால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் 52 பொதுமக்களை நினைவுகூரும் மற்றொரு நினைவேந்தல் நிகழ்வு கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
நிராயுதபாணியான பொதுமக்கள் மீது இந்திய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய
அதே இடத்தில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள்
மற்றும் உள்ளூர்வாசிகள் ஒன்று கூடி நிகழ்வை நடத்தினர்.
மக்களின் கேள்வி
எனினும் இந்த நிகழ்வில், அரசியல்வாதிகள் எவரும் பங்கேற்கவில்லை. இதன்போது
கருத்துரைத்த பாதிக்கப்பட்டவரின் உறவினர்களில் ஒருவர், இந்தியா கோபம்
கொள்ளக்கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காக இவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை
என்றால், இவர்கள் எவ்வாறு தமிழ் மக்கள் நம்புவது என்று கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.