அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக பொதுஜன பெரமுன எச்சரிக்கை
ஜனாதிபதி தேர்தலை இரண்டு வருடத்திற்கு ஒத்திவைக்க ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பாராயின் அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எச்சரித்துள்ளது.
நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (31-05-2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்(Sagara Kariyawasam) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பவற்றை 2 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார்.
ஜனாதிபதியின் யோசனைக்கு எதிர்ப்பு
இந்த நிலையில் தேர்தலை பிற்போடுவதற்கு தங்களது கட்சி ஒத்துழைப்பு வழங்காது என, சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கட்சி என்ற ரீதியில் தங்களது தரப்பினர் ஜனாதிபதியின் குறித்த யோசனைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 2ஆம் நாள் - திருவிழா





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

பாக்கியலட்சுமி, தங்கமகள் சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
