நாங்கள் அணிந்திருக்கும் ஆடையை விற்பனை செய்ய முயற்சிக்க வேண்டாம்! கொந்தளிக்கும் தேரர்
நாங்கள் அணிந்திருக்கும் ஆடையை விற்பனை செய்ய முயற்சிக்க வேண்டாம் என அஸ்கிரி அனுநாயக்க வெடருவே உபாலி தேரர் தெரிவித்துள்ளார்.
தேசிய வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு எதிராக தேசிய பிக்குகள் அமைப்பு களனியில் ஏற்பாடு செய்திருந்த மஹா சங்க சம்மேளனத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,''நாட்டின் அனைத்து விடயங்களையும் அரசியல்மயமாக்காமல் சிறந்த அரச நிர்வாகத்தையும் நாட்டுக்குள் ஏற்படுத்த வேண்டும்.
பெறுமதிமிக்க வளங்கள்
காலத்துக்கு தேவையான மழை பெய்து விவசாயம் செழிப்புற்று நல்ல அறுவடையை பெற்றுக்கொள்வதற்கு அரச பொறிமுறைகள் தர்மத்துடன் செயற்ட வேண்டும். நாட்டின் பெறுமதிமிக்க வளங்களை விற்பனை செய்து, அதனை செய்ய முடியாது.

நாங்கள் அணிந்திருக்கும் ஆடையை விற்பனை செய்ய முயற்சிக்க வேண்டாம். அவ்வாறு விற்பனை செய்தால் எமது நிர்வாணம் முழு உலகுக்கும் வெளிச்சமாகும். அதனால் எமது மேலான கலாசாரத்தை பாதுகாத்துக்கொள்வதே எமக்கு முக்கியமாகும்.
அத்துடன் நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது தேசிய குற்றமாகும். அதனால் இந்த விடயங்களை கருத்திற்கொண்டு அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்ற செய்தியை ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.''என கூறியுள்ளார்.
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam