விக்னேஸ்வரனை கடுமையாக சாடிய சுகாஷ்-செய்திகளின் தொகுப்பு
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் கேள்வி ஒன்றை முன் வைத்துள்ளார்.
அதாவது, இனப்படுகொலை செய்த இராணுவத்திற்கும் விடுதலைக்காகப் போராடிய தமிழ் மக்களுக்கும் ஒரே இடத்தில் அஞ்சலி என்பதை ஏற்க உங்களால் எவ்வாறு முடிந்தது என சி.வி.விக்கினேஸ்வரனை க.சுகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், சில வருடங்களுக்கு முன்னர் உங்களை உங்கள் கட்சியே முதலமைச்சர் பதவியிலிருந்து அகற்றி அரசியலிலிருந்து அப்புறப்படுத்த முற்பட்டனர்.
இதன்போது, கட்சி பேதங்களைக் கடந்து உங்களுக்காக வீதிக்கு இறங்கியதையிட்டு வெட்கப்படுகின்றேன். வேதனைப்படுகின்றேன். இனி ஒரு நிமிடங்கூட தமிழ்த் தேசிய அரசியலில் நீடிக்கத் தகுதியற்றவர் நீங்கள் என கடும் காரசாரமான தனது கருத்தினை முன்வைத்துள்ளார்.

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
