நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு
கடந்த மூன்று நாட்களில் நாடு முழுவதும் வீடுகள் உடைப்பு, வாகன திருட்டு, கொள்ளை, பொருட்கள் திருட்டு என பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
வீடுகள் உடைத்தல் மற்றும் சொத்துக்களைத் திருட்டு என்பனவே அவற்றில் அதிகமாக பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தவிர, நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் வாகனத் திருட்டு தொடர்பான முறைப்பாடுகள் அதிகளவில் கிடைத்துள்ளன.
இதேவேளை, உடனடி கடன் வசதி வழங்குவதாக கூறி இணையத்தில் விளம்பரம் செய்து பல லட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த நபரொருவர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு, கம்பஹா, கெஸ்பேவ, ராகம, வேயங்கொடை, கேகாலை, அனுராதபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் இருந்தும் குறித்த நபருக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கட்டான பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் எனவும் அவர் கம்பஹா - கெக்குலாங்கொட பிரதேசத்தில் தற்காலிகமாக தங்கியிருந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் உடனடியாக கடன் வசதி செய்து தருவதாக இணையத்தில் விளம்பரம் செய்துள்ளதாகவும், அந்த விளம்பரங்களுக்கமைய, பலரிடம் மோசடி செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
