இலங்கையர்களுக்கு பொலிஸார் விடுக்கும் விசேட எச்சரிக்கை
சமூக ஊடகங்கள் ஊடாக பல நிதி மோசடி சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தனது தனிப்பட்ட தகவல்களை வேறொரு தரப்பினருக்கு வழங்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் தனிப்பட்ட தகவல்களை, குறிப்பாக தேசிய அடையாள அட்டை எண், கடவுச்சீட்டு எண், ஓட்டுநர் உரிம எண், கடவுச்சீட்டு புகைப்படம், குடியிருப்பு முகவரி, குடும்பத் தகவல், கணக்குத் தகவல், வங்கிக் கணக்குத் தகவல், குறிப்பாக வங்கிக் கணக்குகளுக்கான ஒருமுறை பயன்படுத்தப்படும் OPT இலக்கம் போன்றவற்றை எக்காரணம் கொண்டும் உங்களுக்குத் தெரியாத எந்த தரப்பினருக்கும் வழங்காதீர்கள்.
சமூக வலைதளங்கள்
கவர்ச்சிகரமான சலுகைகளை நம்பி ஏமாறாதீர்கள். பல்வேறு முன்மொழிவுகள் வரலாம். இலங்கை பொலிஸார் என்ற ரீதியில் இதனை நாம் சொல்ல வேண்டும். பொதுமக்கள் இதை நம்பி ஏமாற வேண்டாம்,
இதுபோன்ற மோசடி செய்பவர்கள், சமூக வலைதளங்கள் மூலம் உங்களை தேடி வரலாம்.
ஆனால், இவ்வாறான வழிகளில் சென்று சிரமப்படாதீர்கள்.
தங்களுக்கு தெரியாமல் இதுபோன்ற செயல்களில் சிக்கி உங்கள் பணத்தை இழக்காதீர்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்
இதேவேளை, இந்த வருடத்தில் 27 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த அனைத்து சம்பவங்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. மேலும், இந்த சம்பவங்களில் இந்த ஆண்டு சில சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
