தென்னிலங்கையில் குழப்பம் ஏற்படுத்திய சட்டத்தரணி - வானத்தை நோக்கி துப்பாக்கிசூடு
பாணந்துறையில் நேற்று இரவு துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு அளுத்கடை நீதிமன்றத்தில் பணிபுரியும் சட்டத்தரணி ஒருவரினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரான சட்டத்தரணியும் அவருடன் வந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட 9எம்எம் கைத்துப்பாக்கி மற்றும் அவர்கள் வந்த சொகுசு ஜீப் வாகனம் என்பனவும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.

சட்டதரணியின் கைத்துப்பாக்கிக்கு உரிமம் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய சட்டத்தரணியின் தோழி ஒருவர் பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கடன் கொடுத்துள்ளார்.
அதனைத் திருப்பிச் செலுத்தாததால், கடனைக் கொடுத்த பெண் கடனாளியின் வீட்டிற்கு வந்துள்ளார். இரு குழுக்களுக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகவும், சட்டத்தரணியை தாக்குவதற்கு எதிரணியினர் தயாரான நிலையில் 9MM ரக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சட்டத்தரணி துப்பாக்கி சூடு நடத்தியதாக விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வழக்கறிஞரின் சொகுசு ஜீப்பும் சேதப்படுத்தப்பட்டது. பாணந்துறை குற்றத்தடுப்பு ஆய்வக அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam