பிரத்தியேக இணையக் குற்றப் பிரிவை நிறுவியுள்ள இலங்கை பொலிஸ்
டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நோக்கிய நாட்டின் விரைவான மாற்றத்துக்கு மத்தியில், இணையக் குற்றங்களின் கூர்மையான அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக, இலங்கை பொலிஸ், ஒரு பிரத்தியேக இணையக் குற்றப் பிரிவை நிறுவியுள்ளது.
சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க, இந்த முயற்சியை அறிவித்துள்ளார்.
நாட்டின் விரிவடைந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்துடன் அதிகரித்து வரும் தரவு மீறல்கள் மற்றும் நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு இணைய (சைபர்) அச்சுறுத்தல்களைச் சமாளிப்பதில் இந்த பிரிவு கவனம் செலுத்தும்.
சட்ட நடவடிக்கைகளில் ஆதிக்கம்
அதிக பரிவர்த்தனைகள் இப்போது இணையத்தில் நடைபெறுவதால், இணையக் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில் சைபர் குற்ற வழக்குகளே, எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri
