கொழும்பின் புறநகரில் நடந்த கொடூரம் - வீட்டிற்குள் வைத்து படுகொலை
மொரட்டுவை, சொய்ஸாபுர அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தபேலா வாசிக்கும் தொழில் ஈடுபடும் பிரேமரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வரும் குறித்த நபர், களனி பிரதேசத்தில் இருந்து வந்தவரால் இந்தக் கொலையை செய்யப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் 68 வயதுடையவராகும். உயிரிழந்த நபர் நேற்று வேறொரு உறவினருடன் இந்த வீட்டில் இருந்ததாகவும், வீட்டின் பக்கத்திலிருந்து அலறல் சத்தம் கேட்டதும் உறவினர் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து பார்த்ததாகவும் அடுக்குமாடி குடியிருப்பில் அயல் வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சடலம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri